யார் இவர்கள் ?..... வாசியுங்கள் ...உங்களுக்கும்  இவர்களை பிடிக்கும் .

இறைகுணஞானி......  இறைகுணஞானி ....... இறைகுணஞானி......இறைகுணஞானி.......இறைகுணஞானி

யான் கண் கண்ட ஞானி களில் வாழும் ஞானி தான் இறை குணத்தை உடைய "இறைகுணஞானி " உலகமக்களின் நலன்  விரும்பி இவரின் சமூக வெப் தளம் www.kgmaster.com இவ் வலய அம்சங்களை ஒவ்வோருவரும் பார்க்கவேண்டும் .

அன்பின் தம்பி, ஒரு சில அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக, நீங்கள் என்னிடம் எதைக் கேட்க முயன்றீர்களோ அது தானாக நிகழும் ஒன்று. அது ஏற்கனவே உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது. நீங்கள் கேட்பீர்கள் என்பதை இந்தியாவுக்கு வரு முன்னரே உறுதியாக உணர்ந்திருந்தேன். நீங்கள் நாளைக்குக் கேட்பேன் என்று கூறியதும் ஏற்கனவே உங்களிடம் அதற்கான தேடுதல் இருப்பதாலும் அந்தத் தேடல் உணரவைக்கும் என்பதாலும் அதை நான் மறுநாள் தொடரவில்லை. உங்கள் கடிதத்தில் அதையே குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் இது புனிதமான உள்ளுணர்வின் இணைப்பு மட்டுமே. உருவங்கள் தொடர்புபடுவதில்லை. ரமணர் ஆச்ச்சிரமத்தில் தியானத்தின் போது முகம் தெரிவதாகக் குறிப்பிட்டீர்கள். அதுவும் தவிர்க்கப் பட வேண்டும் என்பதாலும் நீங்கள் கேட்க இருந்ததை நான் அடுத்த நாள் நினைவு படுத்தவில்லை. பல சம்பவங்களில் உங்களின் அன்பு ஊற்று என்னை மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு நான் பாக்கியவானா என்று அடிக்கடி என்னை நான் கேட்பதுண்டு. வவுனியாவில் இருந்து புகையிரதத்தில் வந்துகொண்டிருந்த பொழுது நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நீங்கள் வந்து கையை எனக்கு முன்னால் நீட்டி ஒரு கம்பியில் பிடித்துக்கொண்டு எனக்குப் பாதுகாப்புக் கொடுத்துகொன்டிருந்தீர்கள். இப்படிப் பல நூறு சம்பவங்கள். 'நான் கேட்க இருந்த வரம் என்னவாக இருக்கும்?' என்று கேட்டிருந்தீர்கள். நான் அறிந்த வரையில், இயற்கையின் அற்புதத்தில், ஒரு நிகழ்வு இருமுறை நிகழ்ந்ததாக இருப்பின் அது சித்தாத்தர்(புத்தர்), ஆனந்தருக்குப் பிறகு நாங்கள் இருவரும் தான். இங்கேயும் முக்கிய விடயம் விடயம் ஒன்று உண்டு. தேவைப்படுமாயின் அப்போது பகிர்ந்துகொள்வோம்.

நன்றியுடன்

அண்ணன்

ஸ்ரீ ல ஸ்ரீ முருகானந்த சுவாமிகள்.....  ஸ்ரீ ல ஸ்ரீ முருகானந்த சுவாமி.....

 யான் கண் கண்ட ஞானி களில் வாழும் ஞானி தான் ஸ்ரீ ல ஸ்ரீ முருகானந்த சுவாமிகள் பிரபஞ்சதுடன் வாழும் மூக்குபொடி சித்தர் என அழைக்கப்படும் ஞானி  ......

 மகராஜி ...  மகராஜி .....  மகராஜி ..... மகராஜி     மகராஜி ..... ... மகராஜி ..... ..


 மகராஜி ..... (இவர்தான் வாழும் குருவுக்குள் எளிமையான ஞான ஒளிகொடுப்பவர் யோகா இல்லை மந்திரம் இல்லை சக்கரம் தியானம் இல்லை தொட்டு தீச்சைஇல்லை .... ) 

“உண்மையான ஆனந்தம் சாதனைகளைப் பற்றியதல்ல, உங்கள் உள்ளேயே அமைதியைக் கண்டுகொள்வதைப் பற்றியது. கண்டுகொள்வதற்காக உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணம்தான் எல்லா பயணங்களையும் விட மிக சிறந்த பயணம்.”
மகராஜி

              உள்ளிருக்கும் உலகத்தை கண்டறியுங்கள்

மகராஜி அவர்கள் தன் சிறுபிராயத்திலிருந்தே மக்களிடம் உள் அமைதியைப் பற்றி உரையாற்றி வருவதுடன் தனது பதிமூன்றாவது வயதில் அவர் சர்வதேச ரீதியில் பிரயாணம் செய்ய தொடங்கினார். அன்றுதொட்டு அவர் உலகெங்குமுள்ள ஆறரைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார். அவரின் உரைகளை பல்வேறு சாதனங்களின் வாயிலாக மலேசியா உட்பட 88-ற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

புதிய கண்டங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கண்டுபிடிப்பாளர்கள் எப்பொழுதும் விண்வெளியை நோக்கியும், சமுத்திரத்தின் அடித்தளத்தை நோக்கியும் செல்கின்றனர். இந்த ஆராய்ச்சிப் பிரயாணங்களில் பங்குபெற முடியாத பலர் கண்டுபிடிப்பதனால் ஏற்படும் கிளர்ச்சியை புத்தகங்களில் இருந்தும், சஞ்சிகைகளில் இருந்தும், மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் பெற்றுகொள்ள விரும்புகின்றனர். இன்னும் சிலரோ

சந்திரனுக்குப் போவதைப் பற்றியும் சமுத்திரத்தின் அடித்தளத்திற்கு போவதைப் பற்றியும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுகொள்வதற்கான உண்மையான தேவை எப்பொழுதும் மக்களிடம் இருப்பதை இதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது.

எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் பயனடையக்கூடிய ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி மகராஜி அவர்கள் உலகெங்கும் சென்று உரையாற்றி வருகின்றார். அவர் ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் கண்டுகொள்ளப்படாத ஒரு இடத்தைப் பற்றியும், அங்கே கண்டு கொள்ளப்படுவதற்காகக் காத்திருக்கும் அமைதியைப் பற்றியும் உரையாற்றுகின்றார். மகராஜி தங்கள் உள்ளே அந்த நிரந்தரமான அமைதியை உணர விரும்புகிறவர்களுக்கு செயல்முறையான ஒரு வழியை காண்பித்துகொடுக்கிறார்.

“அமைதி ஒரு புத்தகத்திலோ, ஒரு இடத்திலோ, ஒரு மலை உச்சியிலோ இல்லை, ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ள வேண்டும். மனிதர்கள் என்ற ரீதியில் நமது பிரதான கனவு என்னவாக இருக்கவேண்டும்? நமக்குள்ளே உள்ள அந்த அமைதியை

கண்டுகொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்பதேயாகும்,” என மகராஜி கூறுகின்றார்.

இந்த வாழ்வு கண்டுகொள்வதைப் பற்றியது. உங்கள் உயிரைக் கண்டுகொள்வதைப் பற்றியது. உண்மையான ஆனந்தத்தை கண்டுகொள்வதைப் பற்றியது. இதை புரிந்து கொள்வதற்கும், உங்களை நிறைவு செய்து கொள்வதற்கும் உங்களுக்கு தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பமானதுதான் இந்த வாழ்வாகும்.


"ரமணரிஷி "    ரமணரிஷி      "ரமணரிஷி "     ரமணரிஷி"      ரமணரிஷி

 

யான்  உள்ளுணர்ந்த ஞானி களில் அருள் தரும் ஞானி தான் "ரமணரிஷி   " பிரபஞ்சதுடன் வாழ்ந்துவரும்  ஞானி இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God

கிருஷ்ணவேணி அம்மா     கிருஷ்ணவேணி அம்மா    கிருஷ்ணவேணி அம்மா     கிருஷ்ணவேணி அம்மா

 கிருஷ்ணவேணி அம்மா நான் விஜே டிவி யில் பார்த்த அம்மா அன்று முதல் தாயின் கிருபை எனக்கு உண்டு .தற்போது பிரபஞ்சத்தில் கலந்துவிட்டார் இறுதி கிரியையும் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்


திண்ணைச்சித்தர்     திண்ணைச்சித்தர்      திண்ணைச்சித்தர்    திண்ணைச்சித்தர்

பதினெட்டு வருடமாக பேசாமல் இருக்கும் சித்தர் இவரை  ஜீ டிவி பார்க்கும் பாக்கியம் பெற்றேன்

"குமாரசாமிஞானி ""குமாரசாமிஞானி ""குமாரசாமிஞானி " "குமாரசாமிஞானி " 

யான் கண் கண்ட ஞானி களில் வாழும் ஞானி தான் "குமாரசாமிஞானி " பிரபஞ்சதுடன் கலந்து விட்ட ஞானி வறுமையில் வாடினாலும் கடமைப்படாதே.. என்பதை உனக்கு நீ தான் ராஜா..வாழ்ந்துபார் வெற்றி நிச்சயம் என்று  அனுபவத்தின் மூலம் வாழ்ந்துகாட்டி என்னையும் வாழவைத்த சித்தர்


 கேள்வியும் நானே...... பதிலும் நானே

ஆன்மீகம் என்றால் என்ன ?

ஆன்மீகம் என்றால் என்ன என்பதக்கு  யாராலும் வரைவிலக்கணம் கூற முடியாது என்பதுதான் உண்மை ..காரணம் அது பொருள் அல்ல .உணர்வு .அதை  உணர்ந்த ஞானிகள்
கூட விளக்க முடியவில்லை அதனால் தான் ஞானிகளிடம் கேட்டல் மௌவுனம் தான் பதில் அல்லது நீ உணரு ...

ஆன்மிகவாதி என்பவர் யார்?

ஆன்மிகவாதி என்பவர் யார் என்பதற்கு விளக்கம் கூறலாம் .உலக சமூகம் வளமோடு வழுவதற்கு சாதாரண வாழ்கையை இறை உணார்வு டனும் மனித நேயத்துடனும் வாழுவதற்கு நெறிப்படுதுபவர் 

சிறந்த ஆ ன்மிகவாதியை எப்படி அடையலாம் காண்பது ?

சிறந்த ஆ ன்மிகவாதியை யார் பார்கிறாரோ? பார்ப்பவர் கண்கள் கலங்கும் பார்க்கவேண்டும் என எப்போதும் மனம் துடிக்கும் .பேசவேண்டும் என மனம் துடிக்கும் .
அவரை பிரிந்தால் அழுகையும் வரும் .இவரை நீங்கள் விரும்பினால் குருவாக எடுங்கள் 

நீங்கள் கூறிய உணர்வு தானே காதலனை கண்ட காதலியின் உணர்வு..அப்படியாயின் காதலன் ஆன்மிகவாதியா?

தவறு ..இது உலகவாழ்க்கை உணர்வு ..ஆன்மிக வாதிகள் பிரபஞ்ச உணர்வுடன் வாழ்வார்கள்

நீங்கள் ஆன்மிகவாதியா ?

இல்லை ...தெரியாது ...ஆர்வம் உண்டு

நீங்கள் ஆன்மிகவாதி யாரையாவது பார்த்தீர்களா ?

ஆம் ...  "இறைகுண    ஞானி " இவருடன் ஏழு நாட்கள் வாழ்தேன் ..
ஸ்ரீலஸ்ரீ முருகானந்த சுவாமிகளை பார்த்தேன் (மூக்கு பொடிசித்தார் )
ரமணரிஷி ஆச்சிரமத்தில் ஆன்மிக காற்றை சுவாசித்தேன் கிருஷ்ணவேணி அம்மா .திண்ணைசித்தர் போன்றோரை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்

ஆன்மிகமும் பக்தியும் ஒன்றா ? 

இல்லை... பக்தி வாதிகளின் தெளிவின்மையலும் மக்களின் தெளிவான மாயையலும் இரண்டும் ஒரே
கருத்தில் கூறப்படுகிறது 


 மாயை என்றால் என்ன ?

உண்மைபொருளை அறியாமல் தாம் அறிந்ததையே உண்மை என தன்னையும் பிறரையும் குழப்பும் அறிவில் தொடர்ந்து வாழ்வது  

சாமிப்படம் சுருவம் போன்றவற்றை வழிபடுவது நண்றா? 

சாமிப்படம் சுருவம் போன்றவற்றை வழிபடுவது தற்காலிக வழிபாட்டுக்கு சரியானது .
ஆன்மீக வாழ்க்கைக்கு சரியே வராது ..காரணம் சூரியனின் படத்தை இரவில் கொண்டுசென்றால் வெளிச்சம் வருமா? சூரியனின் படத்தின் ஊடக சூரியனை பார்க்கும் ஞான அறிவு இருந்தால் நன்று .

ஆன்மீக நாட்டம் இல்லாமல் இருக்க என்ன காரணம் ? எப்படி அதை வரவழைப்பது ?

  சோம்பலும் முயற்சியின்மையும் தான் ஆர்வமின்மைக்கு காரணம் .
ஆர்வத்தை கூட்டுவதக்கு இதை முதலில் செயுங்கள் ......

1)..அதிகாலையில் நித்திரை  எழுங்கள் ....( ஐந்து  மணி அதிகாலை )

2)   முடிந்தால் ஓர ளவு  தினமும் குளியுங்கள்
       விரும்பிய கடவுளை வணங்குங்கள்
       வழமையான கடமைகளை செய்யுங்கள் Make a free website with Yola