எம்மை பற்றி அன்பு உள்ளங்களே ......


யான் ..தான்..உங்கள் ..அன்பு  ஆசிரியர்  பொருளியல் உதயன் 


என் தந்தை பெயர் குமாரசாமி 


என் தாய் பெயர் பூரணம் 


யான் ஆரம்பக்கல்வி நயினாதீவு கணேஷ கனிஷ்ட மகாவிதியலாம் 


சதாரண தரம் மயிலணி மஹா வித்தியாலயம்  சுன்னாகம் 


உயர் தரம்  வைதீஸ்வர கல்லூரி யாழ்ப்பாணத்திலும் 


பட்ட படிப்பு யாழ்ப்பாணம் பல்கலைகழகம் 


தற்போது கொழும்பு சஹிற கல்லூரியில் ஆசிரியர் 


பிறந்த திகதி 16 .11 .1965 ..


பிறந்த இடம் புனித பூமி திருக்கேதீஸ்வரம் 


உடன் பிறப்புகள்  ஏழு பேர் 


பிடித்தது ..படிபிப்பது ..ஆன்மிகம் 


பிடித்த நபர் ..எனது அண்ணன் வாழும் சித்தர்" இறை குணஞானி " 


பிடிக்காதது ..சோம்பல்

 

 எனது வழிகாட்டி  என் அண்ணன் இறை ஞானி    ..

  


அண்ணன் எனக்கு அனுப்பிய கடிதம் 14.11.2012


அன்பின் தம்பி, ஒரு சில அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக, நீங்கள் என்னிடம் எதைக் கேட்க முயன்றீர்களோ அது தானாக நிகழும் ஒன்று. அது ஏற்கனவே உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது. நீங்கள் கேட்பீர்கள் என்பதை இந்தியாவுக்கு வரு முன்னரே உறுதியாக உணர்ந்திருந்தேன். நீங்கள் நாளைக்குக் கேட்பேன் என்று கூறியதும் ஏற்கனவே உங்களிடம் அதற்கான தேடுதல் இருப்பதாலும் அந்தத் தேடல் உணரவைக்கும் என்பதாலும் அதை நான் மறுநாள் தொடரவில்லை. உங்கள் கடிதத்தில் அதையே குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் இது புனிதமான உள்ளுணர்வின் இணைப்பு மட்டுமே. உருவங்கள் தொடர்புபடுவதில்லை. ரமணர் ஆச்ச்சிரமத்தில் தியானத்தின் போது முகம் தெரிவதாகக் குறிப்பிட்டீர்கள். அதுவும் தவிர்க்கப் பட வேண்டும் என்பதாலும் நீங்கள் கேட்க இருந்ததை நான் அடுத்த நாள் நினைவு படுத்தவில்லை. பல சம்பவங்களில் உங்களின் அன்பு ஊற்று என்னை மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு நான் பாக்கியவானா என்று அடிக்கடி என்னை நான் கேட்பதுண்டு. வவுனியாவில் இருந்து புகையிரதத்தில் வந்துகொண்டிருந்த பொழுது நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நீங்கள் வந்து கையை எனக்கு முன்னால் நீட்டி ஒரு கம்பியில் பிடித்துக்கொண்டு எனக்குப் பாதுகாப்புக் கொடுத்துகொன்டிருந்தீர்கள். இப்படிப் பல நூறு சம்பவங்கள். 'நான் கேட்க இருந்த வரம் என்னவாக இருக்கும்?' என்று கேட்டிருந்தீர்கள். நான் அறிந்த வரையில், இயற்கையின் அற்புதத்தில், ஒரு நிகழ்வு இருமுறை நிகழ்ந்ததாக இருப்பின் அது சித்தாத்தர்(புத்தர்), ஆனந்தருக்குப் பிறகு நாங்கள் இருவரும் தான். இங்கேயும் முக்கிய விடயம் விடயம் ஒன்று உண்டு. தேவைப்படுமாயின் அப்போது பகிர்ந்துகொள்வோம்.

நன்றியுடன்

அண்ணன்

 


 

Make a free website with Yola